15 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய மரங்கள் இன்று (10.09) கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வவுனியா, மகாறம்பைக்குளம், 2ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர ஆலோசனையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேராவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையில் பொலிஸார் துரித நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here