வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று (5/5/2025) அனுப்பி வைக்கப்பட்டது.

நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள்,வாக்குச்சீட்டுக்கள், மற்றும் ஏனைய தேவையாண ஆவணங்கள் வவுனியா  மாவட்டச்செயலகத்தில் இருந்து இன்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டது.

பொலிசாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here