சீரற்ற வானிலை காரணமாக வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.








