வவுனியா புதிய பேருந்து நிலையத்தில், எங்குமில்லாதவாறான இருக்கைகளை காணக்கூடியதாக உள்ளது.
பயணிகள் பேருந்திற்காக காத்திருப்பதற்காக குறித்த இருக்கைகள் நிர்மாணிக்கப்பட்டன.

ஆனால் தற்பொழுது குறித்த இருக்கைகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன.
மக்கள் குறித்த இருக்கைகளில் அமரமுடியாத நிலையில் காணப்படுகின்றன.

அங்கவீனமுற்றவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்வறான இருக்கைகளில் அமரமுடியாமல் நெடு நேரம் காத்திருந்து பேருந்துகளுக்கு செல்ல வேண்டிய சிரமமான நிலைமை காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதற்குரிய தீர்வினை உரிய அதிகாரிகள் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









