புத்தளம் – அநுராதபுரம் வீதியில் காட்டு யானை ஒன்று வாகனத்தில் மோதியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை அதிகாலையில் யானைக்கூட்டத்துடன் வீதியைக் கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என வனஜீவராசிகள் அலுவலகம் நம்புகிறது.

வாகனத்தில் மோதிய குட்டி யானையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதற்கமைய, யானைக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here