பத்தரமுல்ல அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் இராணுவத் தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here