யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அடங்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்களை வாக்களிப்பதன் முறையை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

வெளியீட்டு வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.சீ .அமல்ராஜ் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது துண்டுப்பிரசுரத்தை  கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் பெற்றுக்கொண்டார்.

குறித்த துண்டுப்பிரசுரமானது மக்கள் சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பான தெளிவூட்டல் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரமானது உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவையாளர்கள் மூலம் கிராம மக்களுக்கு வழங்கி வாக்களிப்பு முறை தொடர்பாக தெளிவூட்டப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here