மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வாணி விழா பூசை நிகழ்வுகளானது நேற்று (10.10.2024) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன், பிரதேச செயலக பழத்தோட்ட பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பான முறையில் இடம் பெற்றது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.










