அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலை வீதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெரியநீலாவணை 02, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 1 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here