நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிகள் பணம் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டிருந்தது.  இதற்கு விஜய் ஒரு கோடி ரூபாயும், கமல் ஒரு கோடி ரூபாயும் அளித்திருந்தனர்.

இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ருபாய் வழங்கியுள்ளார். தற்போது கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ருபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி கூறி இருக்கிறது.

நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி பல நூறு ஏக்கரில் விவசாயமும் அங்கு செய்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here