மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

பல ஆண்டுகளாக விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வீதியானது பல்வேறு தடவைகள் திறப்பதற்கு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பாதையினை மக்கள் பாவனைக்கு மீண்டும் வழங்கும் வகையில் திறந்துவைக்கப்படவுள்ளது.

நேற்றைய தினம் (22/04/2025) விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் அடைக்கப்பட்டுள்ள வேலிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here