Saturday, April 18, 2026
No menu items!

விமானப்படை

எல்ல – வெல்லவாய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விமானப்படை உதவி!

எல்ல – வெல்லவாய சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இரண்டு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதற்காக தியத்தலாவ விமானப்படை தளத்தில் ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் MI-17 வானூர்தியும், வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் பெல்...

பலாங்கொடை பகுதியில் காட்டுத்தீ!

பலாங்கொடை, இம்புல்பே - ரத்தனகொல்ல பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையின் பெல் 412 உலங்கு வானூர்தி ஈடுபட்டு வருவதாக விமானப்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு..!

இந்தியா - பாகிஸ்தானிடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீ்பபுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி முடிவு செய்துள்ளது. தெக்ரீக்-இ-இன்சாப் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்...

கல்கிசை துப்பாக்கிச் சூடு சம்பவம்; நான்கு சந்தேக நபர்கள் கைது!

கல்கிசையில் 19 வயது சிறுவன் மீது அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய இருவர் உட்பட மொத்தம் நான்கு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில்...

பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது..!

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை  நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல்...

விபத்தில் சிக்கிய இலங்கை விமான படையின் ஹெலிகாப்டர்..!

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறப்பதற்கு நடவடிக்கை!

மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வீதியானது பல்வேறு தடவைகள் திறப்பதற்கு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பாதையினை மக்கள் பாவனைக்கு மீண்டும்...

மூடப்படவுள்ள இலங்கை விமானப்படை அருங்காட்சியகம்!

இலங்கை விமானப்படை அருங்காட்சியகம் 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அருங்காட்சியகம் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படும்.

மட்டு புதூர் வீதிக்கு தீர்வாக புதிய வீதி  – விமான சேவைகள் பிரதி அமைச்சர்..!

மட்டக்களப்பிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று  சனிக்கிழமை (05/04/2025) மட்டு விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து புதூர் பகுதியை இணைக்கும் வீதியை  விமானப்படைக்கான காணியின் ஊடாக புதிய வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பாலையடிவட்டை பகுதியில் வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைதாகியுள்ளனர். இன்று அதிகாலை பாலையடிவட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதன்போது, குறித்த வாகனத்திலிருந்து வெடி பொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் புதையல்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img