2024 ஆம் ஆண்டில் இலங்கையின் விமான நிலையங்கள் ஊடாக பயணிகள் விமானங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் விமானப் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடு 8.88 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17.69 வீத வளர்ச்சியாகும் என நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவின் தலைவர் கலாநிதி சுமித் டி சில்வா தெரிவித்தார்.
சரக்கு போக்குவரத்து 192.498 மெட்ரிக் டன் எனவும், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 21.13 சதவீத வளர்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








