மஹாவிலச்சிய பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்போகத்துக்காக ஐந்நூறு ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் பரங்கிக்காய் பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், பயிரிடப்பட்டுள்ள பரங்கிக்காய்களின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பரங்கிக்காய் 70 ரூபாய் முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் தங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த விலை தங்களுக்கு போதுமானதல்ல என அவர்கள் குறிப்பிடுவதுடன், இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here