உடன் அமுலாகும் வகையில், சில வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது

இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 215 ரூபாவாகவும் மற்றும் சிவப்பு பருப்பு மொத்தக் கொள்வனவின் போது, கிலோ ஒன்று 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 269 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here