2028 ஆம் ஆண்டு இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு ஆசைப்படும் ஆண்டாக இருக்கும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

விளையாட்டுகளில் இருந்து அரசியல் முற்றாக அகற்றப்படும் என உறுதியளித்த பிரதி அமைச்சர், சகல விளையாட்டுக்களையும் ஒலிம்பிக்கை நோக்கி அழைத்துச் செல்வதற்கான திட்டங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

“நாட்டின் விளையாட்டுகள் தேக்கமடைவதை நாம் அனுமதிக்க முடியாது. விளையாட்டு சங்கங்களில் உள்ள பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும்,” என்றார்.

விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்த சுகத் திலகரத்ன, வில்வித்தையை மாத்திரமன்றி நாட்டின் அனைத்து விளையாட்டுக்களையும் சர்வதேச வெற்றிகளை நோக்கி இட்டுச் செல்வது தமது பொறுப்பாகும் என்றார்.

“ஒலிம்பிக்களுக்கு ஆசைப்பட 2028 ஆம் ஆண்டை ஆக்குவோம். ஒன்றாக, விளையாட்டு மூலம் வளமான மற்றும் அழகான தேசத்தின் பார்வையை யதார்த்தமாக்குவோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற நான்காவது தேசிய வில்வித்தை சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இதனைத் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here