அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியத்துக்கான பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (3/18/2025) பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அநுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் 2,934,310 ரூபா திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சில விவசாயிகளிடமிருந்து உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here