2023/2024 மதிப்பீட்டு ஆண்டுகளில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை(07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை வரியாக வசூலித்துள்ளது.

இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதத்தையும் தாண்டியதாக என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான வரி வருமான இலக்கு 2024 பில்லியன் ரூபா எனவும் நிலுவையில் உள்ள 600 பில்லியன் ரூபா வரி வருமானம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயமதிப்பீட்டுக் கொடுப்பனவுகளின் கீழ் வரி செலுத்தாதோரின் வளாகங்களுக்குச் சென்று வரியை வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரியை சட்ட நடைமுறைக்கு ஏற்ப உடனடியாக வசூலிக்க துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here