கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு புளியம்பொக்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் பயணித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியினை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட தர்மபுரம் பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து 2.25 m மில்லிகிராம் ஹெராயினும் 20 கிராம் கேரளா கஞ்சாவும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் இரண்டு சந்தேக நபர்களையும் தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








