ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துத்திரிபிட்டிகம பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுகவெல பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது,  வீதியில் விழுந்து கிடந்த நபர் காயமடைந்துள்ள நிலையில் ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிப்பொல திக்கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here