கொழும்பு, கொஹுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள பேக்கரி (வெதுப்பகம்) ஒன்றில் இன்று திங்கட்கிழமை (02.12.2024) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








