அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மொபைல் போன் போன்று மடித்து வைக்கக்கூடிய 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 ஆண்கள் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒகஸ்ட் 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பின்னர், டிசப்டன் பே எனும் (Deception Bay) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது மொபைல் போன் போன்று மடித்து வைக்கக்கூடிய 2 கைத்துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நீண்ட விசாரணைகளை அடுத்து 4 ஆண்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை குயின்ஸ்லாந்து பொலிஸார் இன்று (ஒகஸ்ட் 12) வெளியிட்டனர்.








