வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக யால, வில்பத்து, குமன மற்றும் பூந்தல ஆகிய தேசிய பூங்காக்களில் நீர் தேங்கும் இடங்கள் வற்றுவதன் காரணமாக, இவ்வாறு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க,

“வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் உள்ள தேசிய பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக விசேட திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது முக்கிய தேசிய பூங்காக்களில் சூரிய சக்தியில் இயங்கும் நீர் வழங்கும் பம்ப் அமைப்பும், குழாய் அமைப்பும்  உள்ளன. அதன் மூலம் நாங்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்கி வழங்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக குறித்த குழாய் அமைப்புகள் சென்றடையாத பகுதிகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலவும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தேவையான அளவுக்கு நீர் வழங்குவதை அதிகரிக்கவோ குறைக்கவோ எம்மால் முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here