நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அது குறித்து (BASL)ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கு தங்கள் எதிர்ப்பை ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

இந்த திருத்தத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சங்கம் வலியுறுத்தியது. இறுதி முடிவெடுப்பதற்கு முன் சட்டத்துறை, நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களுடன் விரிவான  கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.

இந்த சந்திப்பில் இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனினும், நீதித்துறை சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து வரும் ஜனாதிபதி, தாங்கள் முன்வைத்த கவலைகளை கவனமாக பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையை ராஜீவ் அமரசூரிய வெளிப்படுத்தினார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு மோதலானதோ அல்லது எந்தவொரு தனிநபருக்கு எதிரானதோ அல்ல என தெளிவுப்படுத்திய அமரசூரிய, நீதிபதிகளுக்கு எதிரான தனிநபர் தாக்குதல்களை சங்கம் ஆதரிக்காது என்றும் குறிப்பிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here