முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியன்மாரிலிருந்து 103 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர்.
அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.








