Tuesday, June 9, 2026
No menu items!

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் தேர்த்திருவிழாவில் தேரில் இருந்து வீழ்ந்த கலசம் – 55 வயது பெண் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள குருந்தையடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவின்போது, தேரில் பொருத்தப்பட்டிருந்த கலசம் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (வெள்ளி) கோலாகலமாக நடைபெற்ற இத்தேர்த்திருவிழாவின் போது தேரில் பொருத்தப்பட்டிருந்த கலசம் மின் இணைப்பு கம்பியில் சிக்கி கழன்று விழுந்ததால் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் இதன்போது மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர்...

பிரித்தானியாவில்  முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் பேரவலம் குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் பேரவலம் இடம்பெற்று 16 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், பிரித்தானியா - லண்டன் நாடாளுமன்ற சுற்று வட்டப் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இறுதி யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்களையும், துன்புறுத்தல்களையும் கண்டித்தும், சர்வதேச விசாரணையைக் கோரியும்...

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி..!

முள்ளிவாய்க்கால் வார நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் தென்மராட்சி பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று (5/14/2025) இடம் பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்..!

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி இன்றைய தினம் (08.05.2025) மக்களுக்கு வழங்கப்பட்டது.

மிரிகானா இடைத்தங்கல் முகாமிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மியன்மார் பிரஜைகள்..!

திருகோணமலையில் இருந்து மிரிகானா இடைத்தங்கல் முகாமிற்கு இன்று (21.12.2024) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20.12.2024) மாலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது தமது நாட்டில் வாழ முடியாத காரணத்தால் தமது நிலபுலங்களை விற்று படகில் இலங்கைக்கு...

வெளிநாட்டுப் பயணிகளுடன் மர்மமாக கரை ஒதுங்கிய கப்பல்..!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மியன்மாரிலிருந்து 103 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. அவர்களில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழப்பு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தமது தாயுடன், நீராடுவதற்காக அவர்களின் வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றிருந்தபோது, இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் குறித்த குழந்தை மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. 11 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தமிழ் தேசியம் சிதைக்கப்படுகின்றது: பொன்னுத்துரை ஐங்கரநேசன்..!

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலினால் தமிழ் தேசியம் சிதைக்கப்படுகின்றது. சாதியாக மதமாக பிரதேசமாக தமிழ் இனம் பிளவு பட்டு காணப்படுகின்றது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் ஊடக சந்திப்பு தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img