வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இன்று (03.10) பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவராத நிலையில், 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு 45 வயது இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








