புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கொலஎலிய பாடசாலையினுள் அத்துமீறி நுழைந்த காட்டு யானைக் கூட்டம் பாடசாலையின் பாதுகாப்பு வேலியை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த காட்டு யானைகள் கூட்டமானது தென்னை உள்ளிட்ட தோட்டங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அவற்றை சேதப்படுத்தி பின்னர் பாடசாலையின் பாதுகாப்பு வேலியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகக் கிராமப் புறங்களில் சுற்றித்திரிவதால் மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here