வெளிநாட்டில் வேலை வாய்ப்பு  பெற்றுத் தருவதாக கூறி  4,990,000 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவில் பிறந்த இலங்கை குடியுரிமை பெற்ற 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பிரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் குறித்த நபரை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கு அமைய, கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரிடம், வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறு பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என கூறப்படுகிறது.

கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணை நடத்தி வருகிறது.

(AI புகைப்படம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here