தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் 5ஆவது நாளாகவும் இன்று (22/04/2025) பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட காலமானது நேற்று (21/04/2025) முதல் மேலும் 1 மணித்தியாலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5:30 வரை கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தந்தத்தாது கண்காட்சி ஆரம்பமான நாளிலிருந்து சுமார் 400,000 க்கும் அதிகளவான பக்தர்கள் தந்தத்தாது கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளதுடன், வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் முற்பகல் 11 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் பக்தர்களுக்கு, புனித தந்தத்தாதுவைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here