கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்களை ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வரகாபொலவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 24 வயதுடைய தொலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணைகளின் போது, இந்தக் குற்றச் செயலுக்கு உதவிய மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








