கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறைக்காக வந்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த மூவரும் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








