கிதுல்கலப் பிரிவு, ஹட்டன்-கிதுல்கல வீதியில்  இன்று வாகன விபத்து ஒன்றில் 44 வயதுடைய நபர் உயிரிழந்தார்.

கிதுல்கலவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்த கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்த ஓட்டுநர் படுகாயம் அடைந்து தெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கிதுல்கல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் தற்போது தெலிகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கிதுல்கல பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here