ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28.07) இரவு இருவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ஹபராதுவ மற்றும் அகுலுகஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here