காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நோக்கில் ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் செயல்படும் இத்திட்டத்தின் கீழ், ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கிடையில், முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 105,045 ஏக்கர் காணியில் 91% விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் 26,330 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. வனவள திணைக்களம் மற்றும் பிற அரச நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகளும் இதில் அடங்கும்.

எல்லை திருத்தங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் மீண்டும் கையளிக்கப்படும் என்றும், நீண்டகால காணி பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உறுதியாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here