2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில், இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்து 97வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய தரவரிசையின்படி, இலங்கை தற்போது ஈரானுடன் இணைந்து 97வது இடத்தில் உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கை 96வது இடத்தைப் பிடித்திருந்தது.

உலகின் மிகவும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு தரவரிசையாகக் கருதப்படும் இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, முன் விசா இன்றி அணுகக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில், மொத்தம் 199 நாடுகளை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here