ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வெளியீட்டையடுத்து, குறிப்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் மக்களிடையிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, எதிர்மறை கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
காணி மற்றும் வீடுகள் – 40,000,000 ரூபாய்
தங்கநகைகள் – 1,125,000 ரூபாய்
வாகனங்கள் – 15,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -1,377,435 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 57,502,435 ரூபாய்
- பிரதமர் ஹரிணி அமரசூரிய
காணி மற்றும் வீடுகள் – 10,555,615 ரூபாய்
தங்கநகைகள் – 7,000,000 ரூபாய்
முதலீடுகள் – 6,842,604 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -4,082,302 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 27,000,000 ரூபாய்
- அமைச்சர் பிமல் ரத்நாயக்க
காணி மற்றும் வீடுகள் – 6,000,000 ரூபாய்
தங்கநகைகள் – 1,310,000 ரூபாய்
வாகனங்கள் – 15,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -2,745,794 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 25,000,000 ரூபாய்
- அமைச்சர் விஜித ஹேரத்
காணி மற்றும் வீடுகள் – 10,007,000 ரூபாய்
வாகனங்கள் – 27,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -575,276 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 37,582,276 ரூபாய்
- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
காணி மற்றும் வீடுகள் – 55,000,000 ரூபாய்
தங்கநகைகள் – 3,100,000 ரூபாய்
வாகனங்கள் – 21,300,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -4,768,750 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 84,168,750 ரூபாய்
- அமைச்சர் வசந்த சமரசிங்க
வணிக கட்டடங்கள் – 235,000,000 ரூபாய்
காணி மற்றும் வீடுகள் – 10,000,000 ரூபாய்
சூரிய மின்கல கட்டமைப்பு-6,500,000 ரூபாய்
தங்கநகைகள் – 4,550,000 ரூபாய்
வாகனங்கள் – 15,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 3,153,850 ரூபாய்
LOLC பங்குகள் – 21,000 ரூபாய்
வருடாந்த வருமானம் – 15,300,000 ரூபாய்
டிஜிட்டல் பணம் – 3,000 அமெரிக்க டொலர்
- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
காணி மற்றும் வீடுகள் – 76,000,000 ரூபாய்
வருடாந்த வருமானம் – 9,678,185 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 21,933,367 ரூபாய்
- நாமல் ராஜபக்ஷ எம்.பி
காணி மற்றும் வீடுகள் – 5,500,000 ரூபாய் ( மேலும் சில இடங்களின் பெறுமதி குறிப்பிடப்படவில்லை)
வாகனங்கள் – பெறுமதி குறிப்பிடப்படவில்லை
முதலீடுகள் – 39,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் -124,000,000 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 168,500,500 ரூபாய்
- ரஞ்சித் மத்தும பண்டாரஎம்.பி
காணி மற்றும் வீடுகள் – 268,000,000 ரூபாய்
வாகனங்கள் – 22,000,000 ரூபாய்
தங்க நகைகள் – 14,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 7,500,000 ரூபாய்
மொத்த சொத்து மதிப்பு – 311,500,000
- ஹர்ஷ டி சில்வாஎம்.பி
காணி மற்றும் வீடுகள் – 662,000,000 ரூபாய்
வாகனங்கள் – 129,200,000 ரூபாய்
முதலீடுகள் – பெறுமதி குறிப்பிடப்படவில்லை
மொத்த சொத்து மதிப்பு – 141,941 அமெரிக்க டொலர்
- எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
2025 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை








