கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்துவத்தை பிரதேசத்தில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28.11.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து, 15 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here