தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை – NMRA மற்றும் மருத்துவ விநியோக பிரிவு – MSD இடையிலான நிர்வாக ஒருங்கிணைப்பு குறைப்பாடு காரணமாக, புற்றுநோய் நோயாளிகளுக்கு அத்தியாவசியமான 1,60,000 உயிர்காக்கும் ஊசிகள் மருத்துவ விநியோக பிரிவின் கிடங்குகளில் முடக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஊசி பெட்டியிலும் மற்றும் சிரிஞ்சின் முன்பக்கத்திலும் தரவுகள், உற்பத்தி திகதி, காலாவதி திகதி மற்றும் தரம் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தும், சிரிஞ்சின் பின்பக்கத்தில் (லேபளில்) உள்ள நிர்வாக பிரச்சனையை காரணம் காட்டி மருத்துவ விநியோக பிரிவு இந்த மருந்துகளை ஏற்க மறுத்துள்ளது.

900 ரூபாய் பெறுமதியான இந்த ஊசி தற்போது கருப்பு சந்தையில் ரூ. 25,000க்கு மேல் விற்கப்படுவதாகவும், சிலவேளைகளில் அதிக விலையிலும் கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீமோதெரபி’ சிகிச்சை பெறும் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்க மாதம் 25,000 பேருக்கு இந்த ஊசிகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை மீண்டும் பின்பக்க லேபிள் பணிக்காக அனுப்பினால், அவை நாட்டிற்கு வர குறைந்தது 3 மாதங்கள் செல்லும்,
அதன்படி அடுத்த 3 மாதங்களில் சுமார் 75,000 புற்றுநோய் நோயாளிகள் கடும் உயிர் ஆபாயத்தை எதிர்கொள்வார்கள்.

இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வாக, சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட்டு, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் இரத்த நோய் நிபுணர்களை இணைத்து அவசர கலந்துரையாடலை நடத்தி, இந்த ஊசி தொகையை நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here