ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 12,45,74,925 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை – RDA தெரிவித்துள்ளது.

மொத்தமாக இந்த இரண்டு நாட்களிலும் 3,25,316 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் பயணித்துள்ளன.

ஓகஸ்ட் 26 அன்று  6,04,09,995 ரூபாய் வருமானமும் ஓகஸ்ட் 27 அன்று  வருமானம்: 6,41,64,930 ரூபாய் வருமானமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த இரண்டு நாட்களிலும் அதிகபட்ச வாகன போக்குவரத்து *தெற்கு அதிவேக நெடுஞ்சாலை – E01 மற்றும் வெளி வட்ட அதிவேக நெடுஞ்சாலை – E02 ஆகியவற்றில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here