இமயமலை நேபாள-திபெத் எல்லையோரம் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

2015க்கு பின் மிக மோசமான பேரிடர் என தெரிவிப்பு

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கத்திற்கு பின்னர் நேபாளம் சந்திக்கும் மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவாக கருதப்படுகிறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் மற்றும் சேற்றால் நிறைந்த திரிசூலி ஆறு பெருக்கெடுத்ததால் பல வீதிகள் மற்றும் வாகனங்கள் முற்றிலுமாக மண்ணில் புதையுண்டன.

இருப்பினும், திரிசூலி பகுதியில் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கியிருந்த 450 பேர் உட்பட நூற்றுக்கணக்கானோரை மீட்புக்குழுக்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளன.

குப்பைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நதிப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க பொலிஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு நேபாளத்தில் மேலும் ஒரு வெள்ள அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை இருந்தபோதிலும், காணாமல் போனவர்களை தேடும் மற்றும் நிவாரண பொருட்களை விநியோகிக்கும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here