அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 08 அன்று பொதுப் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்ட கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனரமைக்கப்பட்ட பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக பேருந்து நிலையத்தின் நலன்புரி பிரிவினால் முன்வைக்கப்பட்ட முறைபாடுகளைத் தொடர்ந்து, நேற்று (11) களனி பகுதியில் அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட சில பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 2026 ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் சேதம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை இலங்கை விமானப்படையிடமிருந்து பெறப்படும் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







