2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்களின் கோரிக்கைக்கு அமைவாக , தாக்குதல்கள் குறித்த உண்மையை எல்லாம் வல்ல இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளிலும் செபக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.







