உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று நம்பப்படும் பிரித்தானிய-இந்தியரான ஃபௌஜா சிங், 114ஆவது வயதில் விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாபில் சிற்றூந்து ஒன்றில் மோதுண்டு அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்தார்.

அவர் 89 வயதில் ஓடத் தொடங்கி, 2013 இல் ஓய்வு பெற்றபோது ஒன்பது முழு மரதன் ஒட்டங்களில் பங்கேற்றிருந்தார்.

2013 ஆம் ஆண்டு ஹொங்காங்கில் அவர் தனது கடைசி நீண்ட தூரப் போட்டிப் பந்தயத்தில் பங்கேற்றார்.

அதன்போது 10 கிலோமீற்றர் ஓட்டத்தை அவர் ஒரு மணி நேரம், 32 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகளில் ஓடி முடித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரை “நம்பமுடியாத மன உறுதியுடன் கூடிய விதிவிலக்கான தடகள வீரர்” என்று புகழ்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here