December 17, 2025
12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..!
Top Updates புதிய செய்திகள்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..!

May 8, 2024

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க பலப்பிட்டிய நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து இலட்சம் ரூபா நட்டஈடும் இருபத்தைந்தாயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறு பலப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரொருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் சிறுமி தனது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தந்தையின் நண்பரான அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவர் கடந்த 2011 ஆண்டு சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாத போது சிறுமியைப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் சுமார் 13 வருட கால விசாரணையின் பின்னரே பலப்பிட்டிய நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *