நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் வௌியிட்டதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக 130 ரூபாவுக்கு தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








