இருபது இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடை  நபர் ஓமானில் இருந்து குறித்த சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வேளையிலே இவ்வாறு கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (6) கைது செய்யப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபா பெறுமதியான சிகிரெட்டுக்களை மிகவும் தந்திரோபாயமாக இரண்டு பயணப்பொதிகளில் மறைத்துக் வைத்திருந்த நிலைமையில் குறித்த சதேக நபரை கைது செய்துள்ளனர்

மேலும் சந்தேக நபரை  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here