Tuesday, June 9, 2026
No menu items!

ஓமான்

இந்திய வெளிவிவகார அமைச்சருடன்  ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்!

ஓமானில் நடைபெற்ற 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.    

இந்திய பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22/02/2025) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.  இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார். எவ்வாறாயினும் 'கடற்பிராந்திய ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை அடையாளங்காணல்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக ஓமான்...

ஓமான் கடற்பகுதியில் எண்ணெய்க்கப்பலுடன் மூழ்கிய இலங்கையர்கள்…!!

ஓமான் கடற்பகுதியில் கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிய பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் கடல்சார் பாதுகாப்பு மையம் நேற்று தினம் (16.07)  இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் "கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது"...

மர்மமான முறையில் மூவர் உயிரிழப்பு!!!

ஓமானில் Mabela Al Hain நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை இளைஞர்கள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த இளைஞர்களுடன் தங்கியிருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்…!

ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில்...

காசாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இலங்கை தேயிலை.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் பலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா, எகிப்து மற்றும்...

சமநிலையில் முடிவடைந்த தாய்லாந்து-ஓமான் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21) F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இரு அணிகளும் இந்தவொரு கோல்களும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஓமான் அணி அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை கிர்கிஸ்தான் அணியை...

20 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு

இருபது இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடை  நபர் ஓமானில் இருந்து குறித்த சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வேளையிலே இவ்வாறு கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (6) கைது...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img