2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடத்தப்பட்டதுடன், மொத்தம் 452,979 பரீட்சார்த்திகள் பங்குபற்றியுள்ளனர்.
அவர்களில் 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும், doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.








