வவுனியாவில் விருந்தினர் சந்திப்பு..!
மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு, நேற்று(29.06.2024) வவுனியா விருந்தினர் விடுதியில்,காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணி வரையிலும் இடம் பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். சந்திப்பின் முடிவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்..!
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளனர். காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார். அதற்கடுத்து அவரது
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்..!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்தனர். சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக A9வீதியில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காலை 10மணி முதல் அரை மணித்தியாலங்கள்
வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு ..!
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை கௌரவ ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.பிரணவநாதன் அவர்களும் இந்த
கொழும்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி…!
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 5 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 09 ,தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் அந்த குழந்தை நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளது. பின்னர் குழந்தையின்
பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி…!
பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களின் ஆணிகள் லுாசாகி நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தடுத்துள்ளார். அப்போது பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலாங்கொடை டிப்போவிற்குச் சொந்தமான அந்த பேருந்தின் சாரதியாக அஜித் குமார கடமையாற்றியதாகவும் அவரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர்
இரணைமடுக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…!
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் அங்கு சென்றுள்ளனர். நீராடச் சென்ற இவர்களில் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களும், பிரதேச மக்களும்
போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது…!
1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண்டாரவளை, ஹப்புத்தளை, வெலிமடை,
இலங்கையில் உருவாகும் திடீர் பணக்காரர்கள்…!
இலங்கையில் பலர் திடீர் பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறித்த நபர்கள் திடீர் பணக்காரர்களாக மாறுவதற்கு எந்த காரணமும் இல்லை என முறைப்பாடுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கிடைக்கப்பெறும் ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பிலும்
மற்றொரு மீனவரும் பலி..!
கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த மூன்று மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தங்காலையில் இருந்து 320 கடல்மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த மீனவ படகு கரையை நோக்கி பயணிப்பதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.